தமிழ்நாடு

வேடசந்தூரில் ரூ.3.52 லட்சம் பறிமுதல்

6th Mar 2021 02:34 PM

ADVERTISEMENT

 

வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வஞ்சிமுத்து மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கியசாமி தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர்.

அதில், காரில் ரூ.3.52 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து காரில் வந்தவரிடம் நடத்தி விசாரணையில், பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜவுளிக் கடை உரிமையாளர் காளியப்பன் என்பதும், ஜவுளிக் கொள்முதலுக்காக ரூ.3.52 லட்சத்தை எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது.

ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர் அதனை வேடசந்தூர் வட்டாட்சியர் சக்திவேலனிடம் ஒப்படைத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT