தமிழ்நாடு

திமுகவுடன் கருணாஸ் பேச்சுவார்த்தை

6th Mar 2021 12:52 PM

ADVERTISEMENT


சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்காக வேலை செய்வோம் என்று முதுகுலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவிலிருந்து விலகிய கருணாஸ், திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அதிமுக அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது, கட்சியில் சசிகலாதான் என்னை அறிமுகப்படுத்தினார். அதனாலேயே என்னை ஓரங்கட்டிவிட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்காக வேலை செய்வோம் என்றும் அறிவித்தார்.

கடந்த முறை திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனவர் கருணாஸ். தற்போது திமுக கூட்டணியில் பங்கேற்று, ஒரு தொகுதி ஒதுக்கினால், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடத் தயார் என்று கருணாஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

Tags : DMK stalin karunas ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT