தமிழ்நாடு

இரவில் கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு: இளைஞர்களுக்குப் பாராட்டு

DIN


அவிநாசி: அவிநாசி அருகே காசிகவுண்டன்புதூரில் சனிக்கிழமை இரவு கிணற்றுக்குள் விழுந்த மான் குட்டியை உயிருடன் மீட்ட இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அவிநாசி அருகே காசிகவுண்டன்புதூரில் தனியாருக்குச் சொந்தமான 60 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ள 120 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் 4 மாதங்களே ஆன பெண் புள்ளி மான் சனிக்கிழமை இரவு விழுந்தது. 

இதையறிந்த, பாம்பு பிடிப்பதில் பழக்கப்பட்ட அவிநாசி பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜய், சூர்யா மற்றும் இவர்களது நண்பர்கள் கிணற்றுக்குள் இறங்கி நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மானை நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

இதற்கிடையில்,  குட்டி மான் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்படுவதை, தாய் மான் அப்பகுதியிலேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்தது பொதுமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இரவு நேரம் என்றும் பாராமல், கிணற்றில் இருந்து மானை உயிருடன் மீட்ட இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் மீட்கப்பட்ட புள்ளி மான் வனத் துறையினர் மூலம் ஞாயிற்றுக்கிழமை வனப்பகுதியில் விடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT