தமிழ்நாடு

அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி பள்ளி மாணவி உலக சாதனை

DIN

அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்  4-ஆம் வகுப்பு மாணவி வர்ஷிஹா(9) 2 மணி நேரத்தில் 23 கி.மீ. தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

பட்டுக்கோட்டையில்  உலக மகளிர் தினத்தை முன்னிட்டும், நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நமது ஜனநாயக உரிமையான வாக்கினை யாருக்கும் விற்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் புதிய உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மாலா தம்பதியரின் 9 வயது மகள் வர்ஷிஹா. 

இவர்  அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை நடைபெற்ற உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில்  2 மணி நேரத்தில் 23 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கிய நோபல் உலக சாதனை நிகழ்ச்சியைப் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

சாதனை படைத்த மாணவி வர்ஷிஹாவை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நோபல் உலக சாதனை,  நடுவர் அர்ஜுனன் முன்னிலையில் மாணவி வர்ஷிஹாகவுக்கு சான்றிதழ் வழங்கி நோபல் உலக சாதனைக்கான பதக்கத்தை அணிவித்தனர்.

சாதனை நிகழ்த்திய மாணவி வர்ஷிஹா, பயிற்சியாளர் ஏ.ஷீலா   மற்றும் அவரை ஊக்குவித்த தன்னார்வலர்கள் அனைவரையும் எஸ்.இ.டி.வித்தயாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக இயகுநர் எல்.கோவிந்தாரசு நன்றி பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT