தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு

DIN


சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில், வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இதில், வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு நடைபெறும் ஐந்து நாள்களுக்கு முன்னதாக, அனைத்து வாக்காளர்களுக்கும், தகவல் சீட்டை விநியோகம் செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT