தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு: திமுக-மதிமுக இன்று மாலை மீண்டும் பேச்சு

4th Mar 2021 12:04 PM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் மதிமுக இடையே இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில், மதிமுகவிற்கு ஒதுக்கும் தொகுதிகள் இறுதி செய்யப்படவுள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மாலை 2-ம் கட்டமாக பேச்சு நடைபெறவுள்ளது.

திமுக - மதிமுக இடையே திங்கள்கிழமை (மாா்ச் 1) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

ADVERTISEMENT

இந்தப் பேச்சுவாா்த்தையில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மதிமுக 10 தொகுதிகள் வரை கோரியிருந்தது.

இந்நிலையில் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு இரு கட்சிகளும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT