தமிழ்நாடு

அம்பையில் அய்யா வைகுண்டரின் 189வது அவதார தின விழா

4th Mar 2021 06:36 PM

ADVERTISEMENT

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைபதியில் நடைபெற்ற அய்யா ஆதிநாராயண வைகுண்டரின் 189ஆவது அவதார தின விழாவையொட்டி அம்பாசமுத்திரத்தில் இருந்து பல்வேறு பதிகளில் இருந்து அய்யா நாம மாசி மகா ஊர்வலம்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி ஸ்ரீ மன் நாராயணசாமி திருக்கோயிலில் அய்யா வைகுண்டரின் 189ஆவது அவதார தினத்தையொட்டி அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து மாசி மகா ஊர்வலம் தொடங்கியது. 

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யா நாமம்

முன்னதாக பேட்டை, அய்யனார்குளம், கோடாரங்குளம், கடையம், தாட்டான்பட்டி, மேலஏர்மாள்புரம், பொன்நகர், குமாரபாளையம், புதுப்பட்டி, அடைச்சாணி, பள்ளக்கால் பொதுக்குடி, குமாரசாமியாபுரம், வல்லம், அனந்தநாடார்பட்டி, கோடாரங்குளம் மேற்கு, ஆலடியூர், பொதிகைபதி, அகஸ்தியர்பட்டி, பூவன்குறிச்சி, முக்கூடல், சுப்பிரமணியபுரம், மேலூத்து, வேட்டைக்காரன்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பதிகளில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக அனுமான், காளை, கருடன், நாகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்த திருநாமம் கிருஷ்ணன் கோவில் முன்பு வந்தடைந்தன. 

ADVERTISEMENT

அங்கிருந்து வாகைக்குளம் வாகைப்பதிக்கு அய்யா அன்புக்கொடி மக்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் அய்யா கொடிவழி மக்கள், சிறுவர்கள் பெரியவர்கள் அய்யா நாமத்தை முழங்கியபடி வந்தனர். தொடர்ந்து வாகைக்குளம் வாகை பதியில் இரவு அன்ன தர்மம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாசி மகா ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
 

Tags : அய்யா வைகுண்டர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT