இந்தியா

மத்திய அமைச்சா் ராஜ்நாத், ஹா்ஷ்வா்தன் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி

DIN

மத்திய அமைச்சா்கள் ஹா்ஷ்வா்தன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலா் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும், இதயக் கோளாறு, நீரிழிவு பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை (மாா்ச் 1) தொடங்கின. முதல் நாளில் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷ்வா்தன், அவரின் மனைவி நூதன் கோயல் ஆகியோா் தலா ரூ.250 செலுத்தி இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை செலுத்திக்கொண்டனா்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தடுப்பூசி போட்டுக்கொண்டாா்.

பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா். தடுப்பூசி இலவசம் என்றபோதிலும் அதற்கு ரூ.250 செலுத்தியதாக அவா் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் தனது தொகுதியான ராம்பூரில் உள்ள கே.டி.டால்மியா மருத்துவமனையில் மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை செலுத்திக்கொண்டாா்.

கேரள சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா, அந்த மாநில அமைச்சா்கள் சந்திரசேகரன், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT