தமிழ்நாடு

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகள் சேகரிப்பு

3rd Mar 2021 10:24 AM

ADVERTISEMENT


ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்கரையில் நான்கு இடங்களில் 450 ஆமை முட்டைகளை ராமேசுவரம் வனத்துறையினர் புதன்கிழமை சேகரித்து குஞ்சுபொரிப்பகத்தில் பாதுகாத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி கடற்கரையில் ஆண்டுதோறும் டிசம்பா் இறுதியிலிருந்து மாா்ச் வரை கரைக்கு வந்து முட்டைகள் இட்டு மூடிசெல்லும். ஒரு ஆமை சுமாா் 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இடும்.  அதனை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பதில் பாதுகாத்து குஞ்சு பொறித்தவுடன் மீண்டும் கடலில் விட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங்கியது.

அதனை தொடர்ந்து இன்று புதன்கிழமை காலையில் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு இடங்களில் ஆமைகள் வந்து முட்டையிட்டு சென்றது கண்டறியப்பட்டது. அந்த இடங்களில் இருந்து 50 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர். இதுவரை 8400 முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

Tags : turtle eggs Collection Rameswaram beach
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT