தமிழ்நாடு

கை குலுக்கினாலே கூட்டணியா? கமல் கேள்வி

3rd Mar 2021 03:36 PM

ADVERTISEMENT


சென்னை: கை குலுக்கினாலே கூட்டணி அமைந்துவிட்டதாக அர்த்தமா என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்டதாகவும், எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்தான் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேரில் சந்தித்து கை குலுக்கிச் சென்றுவிட்டார். கை குலுக்கிச் சென்றுவிட்டாலே கூட்டணி அமைந்துவிட்டதாக அர்த்தமா? என்று கேள்வி எழுப்பிய கமல், கை குலுக்கிச் சென்றுவிட்டால் கூட்டணி அமைத்ததாக அர்த்தமாகாது என்று விளக்கம் அளித்தார்.

சரத்குமார் பேச்சு குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமலிடம் கேட்கப்பட்டபோது இவ்வாறு அவர் பேசினார். 
 

ADVERTISEMENT

Tags : Kamal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT