தமிழ்நாடு

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட தொடங்கின!

3rd Mar 2021 10:10 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஒராண்டுக்கு பின்னர் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட தொடங்கின. 

புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கரோனா பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவு நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து ஒராண்டுக்கு பின்னர் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் புதன்கிழமை முதல் முழுமையாக செயல்பட தொடங்கின. 

ADVERTISEMENT

நீடராஜப்பர் வீதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் காலை உணவு வழங்கும் பணியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். 

மேலும், தமிழத்தில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை போன்று புதுச்சேரியிலும் மேற்கண்ட வகுப்புகளுக்கு தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags : All schools Pudhucherry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT