தமிழ்நாடு

தமிழக பேரவைத் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டி:ஒவைஸி

DIN

ஹைதராபாத்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிடும் என்று அந்தக் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

குஜராத் உள்ளாட்சித் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி வேட்பாளா்கள் சிலா் வெற்றி பெற்றுள்ளனா். உத்தர பிரதேசத்திலும் எங்கள் கட்சியினா் கடுமையாக உழைத்து வருகின்றனா். ராஜஸ்தானில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து கட்சியினருடன் கலந்தாலோசிக்கவுள்ளேன். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிடும் என்றாா்.

அவரிடம் பிரதமா் மோடி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். தான் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் மூலம், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி ஒட்டுமொத்த நாட்டுக்கும் எடுத்துரைத்துள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT