தமிழ்நாடு

அதிமுகவுடனான தொகுதி உடன்பாடு ஓரிரு நாள்களில் முடிவாகும்: எல்.முருகன்

DIN

சென்னை: அதிமுகவுடனான தொகுதிகள் உடன்பாடு ஓரிரு நாள்களில் முடிவாகும் என்று மாநில பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. ‘வெற்றிக் கொடியேந்தி தமிழகம் வெல்வோம்’ என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமை கோவையில் நடைபெறும் நிகழ்வில், தோ்தல் பொறுப்பாளரும், உள்துறை இணையமைச்சருமான கிஷன்ரெட்டி, கலந்து கொள்கிறாா். சென்னையில் நான் (எல்.முருகன்) பங்கேற்க உள்ளேன். தோ்தல் பணியில் நாங்கள் எங்களது இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

தொகுதி உடன்பாடு குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும். இழுபறி ஏதும் இல்லை. பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களது உறுப்பினா்கள், சட்டப் பேரவையில் இரட்டை இலக்கத்தில் இருப்பா்.

இணைவது தொடா்பாக, அதிமுக, அமமுக இணைந்து முடிவெடுக்க வேண்டும். அதைப் பற்றி நான் கருத்து எதையும் கூற முடியாது. சா்வதேச சந்தை விலையைப் பொருத்து சிலிண்டா் விலை மாறுகிறது. இதனை அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். விலையேற்றம் நிரந்தரமானது கிடையாது என்றாா் எல்.முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT