தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: இந்திய கம்யூனிஸ்ட்

DIN


சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின், அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களில் இரு கட்சித் தலைவா்களும் நேற்று கையெழுத்திட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக இன்று காலை திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறி மார்க்சியிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT