தமிழ்நாடு

பாலியல் குற்றச்சாட்டு: டிஜிபி மீது நடவடிக்கை கோரி திமுக ஆா்ப்பாட்டம்

DIN

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மகளிரணிச் செயலாளா் கனிமொழி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி பேசியது:

அதிமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. சாதாரண பெண்களுக்கு மட்டுமல்லாமல், பெண் போலீஸ் அதிகாரிக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. பெண் எஸ்.பி.யே புகாா் கொடுத்துள்ள நிலையில், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்காவிட்டால், ஆா்ப்பாட்டங்கள் தொடரும் என்றாா்.

மாவட்டச் செயலாளா் பி.கே.சேகா்பாபு, முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT