தமிழ்நாடு

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று ஆலோசனை

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை (மாா்ச் 1) ஆலோசனை நடத்துகிறாா். இந்த ஆலோசனையின்போது, தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படுவதுடன், அவா்களது கருத்துகளும் கோரப்பட உள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கோர தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்: தோ்தல் நடத்தை விதிகள், கரோனா நோய்த்தொற்று காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை நண்பகல் 12.20 மணியளவில் ஆலோசனை நடத்துகிறாா். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனா்.

அதன்படி, ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, தேசியவாத காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT