தமிழ்நாடு

மோடி என்ன சொல்கிறாரோ அதையே பழனிசாமி செய்கிறார்: ராகுல்

PTI


நாகர்கோயில்: ஒரு கலாசாரம், ஒரு நாடு மற்றும் ஒரு வரலாறு என்ற கருத்தை முன்வைக்கும் சக்திகளை ஒதுக்கி வைப்பதில் தமிழகம் இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மோடி அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அவர் பேசுகையில், மொழி மற்றும் கலாசசாரத்திற்கு விரோதமான சக்திகளையும், "ஒரு கலாசாரம், ஒரு நாடு மற்றும் ஒரு வரலாறு" என்ற கருத்தை முன்வைக்கும் சக்திகளையும் ஒதுக்கி வைப்பதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், தமிழக மக்களின் பிரதிநிதியாக இருப்பவரே தமிழக முதல்வராக வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால் மோடிக்கு அடிபணிந்து இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் இதனைச் செய்ய முடியாது. ஒரு முதல்வர் என்றால் அவர் மக்களுக்காகவே இருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் மோடியின் பிரதிநிதியாக இருக்கிறார். மோடி என்ன சொல்கிறாரோ அதையே இவர் செய்கிறார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி, தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் அவமதித்துள்ளனர் என்று கூறினார் ராகுல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT