தமிழ்நாடு

ஊடகத் துறையினருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி

1st Mar 2021 07:51 PM

ADVERTISEMENT


தேர்தல் தினத்தன்று பணியிலிருக்கும் ஊடகத் துறையினர், காவலர்கள் உள்ளிட்டோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க முதன்முறையாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தவிர ரயில் ஓட்டுநர்கள், காவலர்கள், விமானம் மற்றும் கப்பல் துறையில் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT