தமிழ்நாடு

திமுக கூட்டணி: மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்

1st Mar 2021 06:42 PM

ADVERTISEMENT


திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற நிலையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தது:

ADVERTISEMENT

"திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்ததெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும். இதுபற்றிய தகவல்கள் ஓரிரு நாள்களில் வெளியாகும்." 

Tags : DMK alliance
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT