தமிழ்நாடு

தேமுதிக தனித்துப் போட்டி: தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

1st Mar 2021 10:07 PM

ADVERTISEMENT


சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதைக் கொண்டாடும் வகையில் எடப்பாடியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.

அதிமுக கூட்டணியில், தாங்கள் கோரிய எண்ணிக்கையில் சீட் கிடைக்காத நிலையில், எதிர்வரும்  சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக தனித்துப் 
போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து, எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் ஜிவானந்தம் தலைமையில், திங்கள்கிழமை இரவு திரண்ட தேமுதிகவினர், கட்சி தலைமையின் முடிவை வரவேற்று, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர் பாலாஜி, தங்கமணி, மெய்வேல், அமுதா உள்ளிட்ட திரளான தேமுதிகவினர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

முன்னதாக, 'நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு' என்பதைக் குறிக்கும் வகையிலான புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதிஷ்.
 

Tags : DMDK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT