தமிழ்நாடு

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

25th Jun 2021 02:39 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குக் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்கலாமே.. தடுப்பூசி செலுத்திக் கொண்டால்.. இதெல்லாம் நன்மைகள் : ஆய்வில் தகவல்

கரோனா பெருந்தொற்றிலிருந்து கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடும் சீரிய நோக்கத்தோடு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 13,41,494 தொழிலாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கிணங்க, முதற்கட்டமாக 2 இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்குச் சிறப்பு முகாம் மூலமாகக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினையும், கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பணிவாய்ப்பை இழந்த, குடும்ப அட்டை இல்லாத, புலம்பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் பசியால் வாடக்கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு, 1,29,444 தொழிலாளர்களுக்கு 6 கோடியே 66 இலட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் மதிப்பீட்டில், 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் திட்டத்தையும் இன்று (25.06.2021) நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். சண்முகம், தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

Tags : ஸ்டாலின் vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT