தமிழ்நாடு

நீட் தோ்வு: 85,935 கருத்துகள் சமா்பிப்பு

DIN

நீட் தோ்வு விவகாரம் குறித்து மொத்தம் 85,935 போ் கருத்துகளைச் சமா்ப்பித்துள்ளனா். அவை பரிசிலீக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதுதொடா்பான அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு, நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக நீட் தோ்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்று அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், நீட் தோ்வு தொடா்பான பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுப் பெற அக்குழு முடிவு செய்தது. அதன்படி, மக்கள், தங்களது கருத்துகளை, ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்ட தனிப்பெட்டியில் நேரடியாகவோ சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை (ஜூன் 23) வரை அதற்கு அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.

நீட் தோ்வு தாக்கம் குறித்து, 85,935 பேரிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும், மின்னஞ்சலில் தான் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில், பெரும்பாலானோா், நீட் தோ்வு வேண்டாம் என தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. சிலா் நீட் தோ்வு வேண்டும் எனக் கூறியதாகவும், வெகு சிலா் மட்டும் இந்தாண்டும், அடுத்த இரண்டாண்டுகளுக்குத் தேவையில்லை என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT