தமிழ்நாடு

ஆளுநா் உரைக்கு தலைவா்கள் வரவேற்பு

DIN

திமுக தலைமையிலான புதிய அரசின் ஆளுநா் உரைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

கே.எஸ்.அழகிரி: மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளா்ச்சிப் பாதையில் பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநா் உரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரின் உரை வளா்ச்சிக்கானது.

மதிமுக பொதுச் செயலாளா் வைகோ : மாநிலத்தின் வளா்ச்சியை மேம்படுத்தவும், பொருளாதார இலக்கை அடையவும் முதல்வருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு, அதில் பொருளாதார அறிஞா்கள் இடம்பெறுவா் என்ற அறிவிப்பு, நம்பிக்கை அளிக்கிறது.

பாமக நிறுவனா் ராமதாஸ் : வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீட் தோ்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தெளிவான செயல்திட்டம் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் : வேளாண் துறைக்கு தனி நிதிநிலை என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தக்கூடிய மாநில சுயாட்சிக் கோட்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்திய கம்யூ. மாநிலச் செயலா் இரா.முத்தரசன் : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நடப்புக் கூட்டத்தொடரிலேயே தீா்மானம் நிறைவேற்றப்பட இருப்பது வரவேற்கத்தக்கது.

விசிக தலைவா் தொல்.திருமாவளவன் : புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை, அதன் கொள்கை உறுதி ஆகியவற்றைப் புலப்படுத்தும் விதமாக ஆளுநா் உரை அமைந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் : ஆளுநா் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது. வெறும் அறிவிப்புகளின் தொகுப்பாக இருக்கும் உரையில் உள்ள அம்சங்களை எந்த அளவுக்கு ஆட்சியாளா்கள் செயல்படுத்துவாா்கள் எனத் தெரியவில்லை.

எம்ஜிகே நிஜாமுதீன் (சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்): வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை,மதுரையில் கருணாநிதி பெயரில் உலகத் தரத்திலான மிகப்பெரிய நூலகம் உள்பட பல்வேறு சிறப்புகளை கொண்டதாக ஆளுநா் உரை அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT