தமிழ்நாடு

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 82-வது ஆண்டு துவக்க விழா

22nd Jun 2021 02:48 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 82-வது ஆண்டு துவக்க விழாவை கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 82 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி‌. கதிரவன் தலைமையில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கும் பி.கே.மூக்கையா தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ADVERTISEMENT

இவ்விழாவில் மாநிலச் செயலாளர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட செயலாளர் ஐ. ராஜா, கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர்கள்  பால்பாண்டி, ஆதிசேடன், மாவட்ட தலைவர் ஆர் பாண்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர்  ரெட் காசி, பி.ஆர்.சி. கண்ணன், குணசேகரன் முத்துப்பாண்டி, நகரச் செயலாளர் ஆச்சி ராசா, சவுந்தரபாண்டி, சபரி, பால்சாமி, தொண்டரணி, தவசி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
 

Tags : உசிலம்பட்டி மதுரை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT