தமிழ்நாடு

அப்பல்லோவில் காரை விட்டு இறங்காமலேயே தடுப்பூசி

DIN

சென்னை: சென்னையில் உள்ள அப்பல்லோ புரோடான் புற்றுநோய் மையத்தில் காரை விட்டு கீழே இறங்காமலேயே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, இந்த புதிய திட்டத்தை தொடக்கிவைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி தெற்காசியாவின் முதல் புரோட்டான் சிகிச்சை மையமாக விளங்கும் அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின்  வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்றது.

மருத்துவமனைக்குள் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமே என்ற ஒரு தயக்கமே, பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து தாமதப்படுத்தி வருகிறது. இந்தத் தயக்கத்தை சரி செய்யும் வகையில், அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில், தற்காலிகமாக வாகனத்தில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு திரும்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இதன்படி, மருத்துவமனைக்குச் செல்லும் ஒருவர், தனது காரிலிருந்து கீழே இறங்காமலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு, கார்களை நிறுத்த ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு 20 நிமிடம், காரை நிறுத்திவிட்டு, காருக்குள்ளேயே இருக்கலாம். தடுப்பூசி செலுத்தி 20 நிமிடம் வரை எந்த உடல் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, வீட்டுக்கு பாதுகாப்பாகச் செல்லலாம்.

இதுகுறித்து பீரதா ரெட்டியிடம் பேசுகையில், மருத்துவமனைக்கு வந்து கூட்டத்தில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பயந்து பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடமிருந்து மிகுந்த ஆர்வமும் வரவேற்பும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பது மிகவும் முக்கியத்துவம் என்பதை உணர்ந்தே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர், கோவின் இணையதளம் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்துவிட்டு, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்துக்கு வந்து காரை விட்டு கீழே இறங்காமலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டு செல்லலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT