தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,500-க்கும் கீழ் குறைந்தது!

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,500-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,28,768 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,032 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,18,474 பேர் குணமடைந்துள்ளனர். 

தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,262 ஆக குறைந்துள்ளது. நேற்று கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,360 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நேற்று(சனிக்கிழமை) மட்டும் 28,560 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது. 

அதேபோன்று சென்னையில் நேற்று 30,740 பேர் உள்பட இதுவரை 23,21,850 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT