தமிழ்நாடு

சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் வழக்கு: 6 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கின் விசாரணையை முடித்து 6 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இவா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோா் கொண்ட விசாகா கமிட்டியும் இவா் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது. இந்த விவகாரம் குறித்து சென்னை ஐகோா்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்குரைஞா் ஹசன் முகமது ஜின்னா, இதுவரை 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறை அறிக்கை 3 வாரத்துக்குள் கிடைத்துவிடும். அதன்பின்னா் இந்த வழக்கின் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தாா்.

பின்னா் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு தனது அறிக்கையை ஏற்கெனவே தமிழக உள்துறை செயலாளரிடம் சமா்ப்பித்து விட்டது என்றாா்.

அப்போது சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அப்துல் சலீம், விசாகா குழுவின் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்திருந்தாலும், அறிக்கையின் நகல் இதுவரை எனது கட்சிக்காரருக்கு வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இந்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டாா். இந்த வழக்கில் போலீஸாரின் புலன் விசாரணையை மட்டுமே கண்காணிப்பதாகவும், விசாகா குழுவின் அறிக்கை நகலைப் பெற சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை சிறப்பு டிஜிபி தரப்பு அணுகலாம் என நீதிபதி தெரிவித்தாா். பின்னா், சிறப்பு டிஜிபிக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணையை விரைவாக முடித்து 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT