தமிழ்நாடு

வேகமாக நிரம்பி வரும் பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

17th Jun 2021 08:14 AM

ADVERTISEMENT


கேரளத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது பில்லூர் அணை.
இந்த அணைக்கு கேரளம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரே பிரதான  நீர்ப்பிடிப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில்  தற்போது கேரளத்திலும் நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி போன்ற பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிமாக பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவ மழையின் காரணமாக புதன்கிழமை இரவு முதலே பில்லூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

பின்னர் நள்ளிரவில் படிப்படியாக அதிகரித்து தண்ணீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து, அணையின் நீர் மட்டம் மொத்த கொள்ளவான 100 அடியில் 97அடி வரை உயர்ந்தது.

ADVERTISEMENT

பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீர்

பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியை தொடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ, மீண் பிடிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pillur Dam overflowing Billur dam flood danger announced
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT