தமிழ்நாடு

பில்லூர் அணையில் உபரிநீர் திறப்பு: பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 8226 கனஅடியாக அதிகரிப்பு

17th Jun 2021 10:14 AM

ADVERTISEMENT


பில்லூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4611 அடியில் இருந்து 8226  கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அவலாஞ்சி, நடுவட்டம், அப்பர்பவானி ஆகிய வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பில்லூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் பில்லூர் அணை வேகமாக நிரம்பி முழுகொள்ளளவை எட்டியாதல் அணைக்கு வரும் உபரிநீரான 14 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த உபரிநீர் பவானிசாகர் அணைக்கு வந்து சேர்ந்ததால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  8226 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 89.13 அடியில் இருந்து 89.73 அடியாக உயர்ந்துள்ளது. 

தெங்குமரஹாடா மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பில்லூர் அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதாலும் அணை வேகமாக நிரம்புகிறது. 

ADVERTISEMENT

தற்போதைய நிலவரப்படி, பவானிசாகர் அணை நீர்மட்டம் 89.76 அடியாகவும், நீர்வரத்து 8223 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1000 அடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 21.43 அடியாகக உள்ளது.

Tags : Overflow Billur Dam Bhavani Sagar Dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT