தமிழ்நாடு

ஸ்ரீ வல்லபாச்சார்யா வித்யா சபா சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதி

15th Jun 2021 04:53 PM

ADVERTISEMENT

கரோனா நிவாரணப் பணிகளுக்கான முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சென்னை ஸ்ரீ வல்லபாச்சார்யா வித்யா சபா சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கரோனா நிவாரணப் பணிகளுக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, நிறுவனங்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் எனப் பலரும் கரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர். 

சென்னை ஸ்ரீ வல்லபாச்சார்யா வித்யா சபா சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சபாவின் உறுப்பினர் பி. ஹரிதாஸ் வழங்கினார். சபா உறுப்பினர் எஸ்.ஆர். தாமணி மற்றும் செயலாளர் மனோஜ் குமார் சொந்தாலியா ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT