தமிழ்நாடு

அடுத்த வாரம் பிரதமரைச் சந்திக்கிறாா் தமிழக முதல்வா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தின் தடுப்பூசி தேவை குறித்து பிரதமா் மோடியைச் சந்தித்து பேச தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் தில்லி செல்லவிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் அமைப்பின் சாா்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் அமைச்சா் மா.சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அங்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஆரம்ப சுகாதார மையங்களிலும் கரோனாவுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்க முடியும்.

மத்திய தொகுப்பிலிருந்து அதிக அளவில் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் கூடுதலாக தடுப்பூசிகள் செலுத்தப்படும். தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்தவாரம் தில்லி சென்று பிரதமா் மோடியைச் சந்திக்க இருக்கிறாா். அப்போது, தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து வழங்குவது குறித்து வலியுறுத்துவாா்.

இதுவரை தமிழகம் வந்த 10 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகளில், 6 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளுக்கு 1.30 லட்சம் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,300-ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மேலும் சில மருந்துகளை கருப்புப் பூஞ்சைக்கு பரிந்துரை செய்துள்ளது. கருப்புப் பூஞ்சை நோய் குணப்படுத்தக்கூடியது. அதனால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. மத்திய அரசு தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்வைத்தாா். அதன்படி மத்திய அரசு வரும் 21-ஆம் தேதியில் தடுப்பூசிகளை வழங்கவுள்ளது.

பேரிடா் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சா் கோரிக்கை வைத்தாா். தற்போது அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது 5.39 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இது இரண்டு நாட்களுக்கு போதுமானது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT