தமிழ்நாடு

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர்

DIN

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாதம் 10-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிா்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. 
அதன்படி, தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. மதுக்குடிப்போர் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். 
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். இந்த நிலையில், போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பல்வேறு விமர்சனங்களுககு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும். டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT