தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

14th Jun 2021 01:22 PM

ADVERTISEMENT

திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

அதுபோல, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தலா ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில், சுமாா் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நாளொன்றுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில், கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உயரத் தொடங்கியது.

ADVERTISEMENT

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 25,009-ஆக அதிகரித்துள்ளது. 

அதே நேரம், 5 லட்சத்து 8,043 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 9,140 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,826 ஆக அதிகரித்துள்ளது.

Tags : chennai coronavirus corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT