தமிழ்நாடு

'உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம்' - கமல்ஹாசன்

DIN

வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்யவேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

ரத்த வகைகளை கண்டறிந்து ரத்தம் செலுத்தும் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஆஸ்திரிய மருத்துவர் கார்ல் லண்ட்ஸ்டெய்னர்-இன் பிறந்தநாளான ஜூன் 14 ஆம் தேதி உலக ரத்த தான நாளாகக் கொண்டாடப்படும் என உலக  சுகாதார அமைப்பு கடந்த 2005 ஆம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT