தமிழ்நாடு

3 மாவட்டங்களில் கனழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

13th Jun 2021 06:15 PM

ADVERTISEMENT

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையொட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். 
இதன்காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய(திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார் 5, தஞ்சாவூர் அதிராம்பட்டினம் 4, நாகப்பட்டினம் வேதாரண்யம், கடலூர் பரங்கிப்பேட்டை தலா 3 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Tags : Chennai Meteorological Center
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT