தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து ஆக. 1 முதல் பாசனத்துக்கு நீர்திறக்க அரசு உத்தரவு

31st Jul 2021 02:03 PM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணையிலிருந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுள்ள பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உத்தரவில், மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுள்ள பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக 01.08.2021 முதல் 15.12.2021 வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : mettur mettur dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT