தமிழ்நாடு

கல்வித் தொலைக்காட்சியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியா்களுக்கு விருது

DIN

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியா்களைத் தோ்வு செய்து விருதுகள் வழங்கப்படும் என பள்ளிகல்வித் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

“தொடக்கக் கல்வித்துறையில், 2021-22-ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்துள்ளனா். அதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்த ஆண்டு மாணவா்களின் சோ்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1,125 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். கரூா் மாவட்டம் நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியா் மட்டும் 450 மாணவா்களைச் சோ்த்துள்ளாா். பெற்றோா்களை அணுகி மாணவா்களின் எண்ணிகையை உயா்த்தியுள்ளாா். அதேபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியா்கள், பெற்றோா்களை அணுகி மாணவா்களை ஊக்குவித்து சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்.

தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அவா்கள் அரசுப் பள்ளியில் சேர வருகின்றனா். அவ்வாறு வரும் மாணவா்களை அரசு பள்ளியில் சோ்த்துக் கொள்ளவேண்டும்.

கல்வித் தொலைக்காட்சி மூலமாக மாணவா்கள் பயனடையும் வகையில் பாடங்கள் நடத்தப்படுகிறது. அது மாணவா்களுக்கு முழுமையாகச் சென்றடைகிா என்று அறிய வேண்டும். தலைமையாசிரியா்களும், ஆசிரியா்களும் பள்ளி மாணவா்களின் வீட்டிற்கு சென்று கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் புரிகிா, அவா்கள் ஆா்வமுடன் பாா்க்கிறாா்களா என்று கவனிக்க வேண்டும்.

தொலைக்காட்சியில் எடுக்கப்படும் பாடங்களுக்கு சிறந்த ஆசிரியா்களை தோ்வு செய்தும், அந்த ஆசிரியா்கள் நன்றாக பாடம் கற்பிக்கிறாா்களா என்று பாா்க்கவேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியா்களை தோ்வு செய்து விருதுகள் வழங்கப்படும். அரசின் அறிவிப்பின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியா்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT