தமிழ்நாடு

மானாமதுரை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

30th Jul 2021 01:53 PM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை அரசு இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மானாமதுரை வட்டம் முத்தனேந்தலில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்ததாக புகார் எழுந்ததையடுத்து மானாமதுரை வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்பை காலி செய்யுமாறு தெரிவித்தனர்.

ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதநிலையில் வருவாய்த்துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர்.

ADVERTISEMENT

அதன்படி மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் தலைமையில் முத்தனேந்தலில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த 7 கட்டுமானங்களை  ஜேசிபி இயந்திரம் மூலம் வருவாய் துறையினர் அகற்றினர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்து முத்தனேந்தலில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
 

Tags : Manamadurai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT