தமிழ்நாடு

58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி கோட்டாட்சியரிடம் மனு

30th Jul 2021 12:42 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பாக 58 கிராம கால்வாய் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு 58 கிராம பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறக்க கோரி சர்வதேச உரிமைகள் கழகம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சூரியபாண்டி தலைமையில் மாவட்டச் செயலாளர் எம். செல்வேந்திரன் 58 கிராம பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் விரைவில் தண்ணீரை திறக்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது. இரண்டு  நாள்களுக்குள் தண்ணீரைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
 

Tags : water level usilambatti
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT