தமிழ்நாடு

சென்னை: அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

30th Jul 2021 04:06 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் தேர்வு நடைபெறுகிறது. 

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 18முதல் 50வரை. சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் தங்கள் விண்ணப்பங்களை (அலை பேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இதர விபரங்களுடன்): “முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600 008” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.08.2021. 

தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சென்னை நகர வடகோட்டத்தின் பூங்கா நகர், வேப்பேரி, எழும்பூர், போர்ட் செயின்ட் ஜார்ஜ், கீழ்பாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஷெனாய் நகர், அமிஞ்சிகரை, சேத்துப்பட்டு, ஐ.சி.எப், வியாசர்பாடி, அண்ணா நகர், தண்டையார்பேட்டை, ஜவஹர் நகர், பிளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு, சென்னை உயர் நீதி மன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் பணி புரியலாம்.

ADVERTISEMENT

மேலும் விபரங்களுக்கு அணுகவும்: 
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600008. தொலை பேசி எண் :044- 2827 3637; 
மின்னஞ்சல் முகவரி: sreeanrindiapost@gmail.com

இந்தத் தகவல், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம். சென்னை-600008 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : post office postal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT