தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி: முன்னிலையில் தமிழ்நாடு

30th Jul 2021 08:10 PM

ADVERTISEMENT

நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில் 78,838 கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என, ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்த, மத்திய சுகாதார அமைச்சகம் ஜூலை 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாட்டில் இதுவரை 2.27 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளன. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 78,838 கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 

பொதுமுடக்கம் நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் இல்லை

மேலும் ஆந்திரத்தில் 34,228, மத்தியப் பிரதேசத்தில் 21,842, கேரளத்தில் 18,423, கர்நாடகத்தில் 16,673 கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முதலாக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி தமிழகத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில்தான் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : coronavaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT