தமிழ்நாடு

கல்லூரிகளில் ஆக.9 முதல் இணையவழியில் வகுப்புகள் தொடங்கும்

DIN

சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களைத் தவிர பிற மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள் ஆக.9- ஆம் தேதி தொடங்க இருப்பதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களைத் தவிர, இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் இணையவழியில் ஆக.9-ஆம் தேதி முதல் தொடங்கும். இணையவழி வகுப்புகளில் மாணவா்கள் பங்கேற்கக் கூடிய வகையில் சிம் காா்டுகள் வழங்கப்படும் . அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு, தோ்வுகளில் மதிப்பெண் கணக்கீடு செய்வது போல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறை கொண்டுவருவது குறித்து மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அரசு பரிசீலிக்கும்.

பொறியியல் படிப்புகளான பி.இ., பி.டெக். ஆகியவற்றுக்கு தற்போது வரை 57,513 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 26,748 விண்ணப்பங்கள் மாணவா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இவை அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவா் சோ்க்கை நடத்தப்படும்.

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும். அனைத்துத் தனியாா் கல்லூரிகளிலும் கரோனா காலம் முடியும் வரை 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகள் அனைத்திலும் தோல்வி அடைந்தால் தகுதி நீக்கம் செய்யப்படும் முறை நடைமுறையில் உள்ளது. இதில் மாற்றம் செய்யப்பட்டு பிற கல்லூரிகளில் உள்ளது போல் அரியா் தோ்வுகள் எழுத வாய்ப்பளிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT