தமிழ்நாடு

திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட சார்பில் காட்டூர் சக்தி நகரில் திமுக அரசைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  புறநகர் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை வகித்தார்.

அரியமங்கலம் பகுதிச் செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் குமார் பேசுகையில், 505 வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் பரப்பி ஆட்சியைப் பிடித்து இதுவரை கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றவில்லை. மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் குமார், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த தேர்தலில் 505 வாக்குறுதிகளை பொதுமக்களிடம் சொல்லி ஓட்டு வாங்கியவர். அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார். இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களிடம் 505 வாக்குறுதிகளையும், திருச்சி பகுதிக்கு மட்டும் 35 வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளார்.

60 மாதம் வரை அவர்கள் ஆளமுடியும் 60 மாதத்திற்கு தினமும் ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால்தான் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி முடிக்க முடியும் . தற்பொழுது மூன்று மாதம் முடிந்து உள்ளது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இந்நிலை நீடித்தால் தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது போல் தமிழகத்திலும் நாங்கள் நீதிமன்றம் செல்ல நேரிடும். அந்த நிலைக்கு எங்களை செல்லவிடாமல் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு உடனடியாக நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வட்ட செயலாளர்கள் வேல்முருகன், கே.பி.சங்கர், தெய்வமணிகண்டன், ரவிசங்கர், ஆர்பி கணேசன், விஷ்வநாதன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT