தமிழ்நாடு

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்: வைத்திலிங்கம் பேட்டி

28th Jul 2021 01:15 PM

ADVERTISEMENT

 

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்எல்ஏ.

நீட் தோ்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதன்படி, தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலையை ஆட்சிக்கு வந்தால் குறைப்பதாகக் கூறியதை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். 

மத்திய அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், அதைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் வைத்திலிங்கம்.

Tags : protest மேக்கேதாட்டு அணை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT