தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி: ஏழை எளியோருக்காக கட்டப்பட்ட வீட்டை எம்எல்ஏ திறந்து வைத்தார்

25th Jul 2021 12:23 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லயன்ஸ் கிளப் நிர்வாகியும் பாரத் ஆக்சிஜன் நிறுவனத் தலைவருமான ஜெ.கிளமென்ட் அவரது சொந்த முயற்சியில் ஏழை எளியோருக்கு வீடு கட்டி தரும் நிலையில், 27வது வீட்டை கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.பி.முனுசாமி நகரில் செல்வி என்பவருக்கு 1.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தந்தார். 

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாரத் ஆக்சிஜன் நிறுவத்தின் தலைவர் ஜெ.கிளமெண்ட். இவர் கடந்த சில வருடங்களாக கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் ஏழை எளியோருக்கு அவரது சொந்த செலவில் 1.30 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தந்து வருகிறார். அந்த வகையில் இவரது சார்பில் 27வது வீடு கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி எஸ்.பி.முனுசாமி நகரில் செல்வி என்பவருக்கு கட்டித் தரப்பட்டது.

தொடர்ந்து இந்த வீட்டை திறந்து பயனாளிக்கு ஒப்படைக்கும் விழா தொழிலதிபர் கிளமெண்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு லயன்ஸ் கிளப் கவர்னர் ஆர்.ஸ்ரீதரன், முதர்நிலை கவர்னர் பி.வி.ரவிந்திரன்,  சேர்மேன் சிவகுமா, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சுதாகர், ஜெயராமன், பரந்தாமன், சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் நிர்வாகி சிந்து கிளமெண்ட் வரவேற்றார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், 
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்து பயனாளிக்கு வீட்டின்  சாவியை ஒப்படைத்து, ஏழை எளியோர்கள் 27 பேருக்கு வீடு கட்டி தந்த தொழிலதிபர் ஜெ.கிளமெண்டின் சேவையை பாராட்டினார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர்  ந.மகேஷ் , கும்மிடிப்பூண்டி  
காவல் துணை கண்காணிப்பாளர்  எஸ்.ரித்து, திமுக நகரச் செயலாளர் அறிவழகன், பெத்திக்குப்பம் ஊராட்சி துணைத் தலைவர் குணசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த நிகழ்வின்போது பயனாளிக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோக பொருள்களையும், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட் வழங்கினார்.

Tags : house Gummidipoondi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT