தமிழ்நாடு

இளவரசியின் சகோதரர் ஜி.கே. அண்ணாதுரை காலமானார்

25th Jul 2021 01:31 PM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஜி.கே. அண்ணாதுரை (60) .

கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வீடு திரும்பி நிலையில். கடந்த சில நாள்களுக்கு முன் கரும்பூஞ்சை நோய் தாக்குதல் காரணமாக சென்னை அப்பல்லோ மருந்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அண்ணாதுரை அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

அண்ணாதுரை, கோட்டூர் ஒன்றியக் குழு முன்னாள் தலைவராகவும் அமமுக கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலராகவும் இருந்தார். இவருக்கு மனைவி விஜயலெட்சுமி, மகன் பிரவீன் உள்ளனர்.

அண்ணாதுரையின் உடல் சென்னையிலிருந்து, பெருகவாழ்ந்தானுக்கு எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி இளவரசி. சசிகலாவுடன் போயஸ் கார்டனில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையார் இளவரசி. இவரது உடன் பிறந்த  சகோதர்தான் ஜி.கே. அண்ணாதுரை.

Tags : gk annadurai thiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT