தமிழ்நாடு

நடிகா் விஜய் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு: விசாரணைக்குப் பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

நடிகா் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உயா்நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

பிரிட்டனில் இருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகா் விஜய், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இந்த காரை தென் சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தாா். அப்போது தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியைச் செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நுழைவு வரித் தொகை அதிகமாக உள்ளதால், வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நுழைவு வரித் தொகையில் 20 சதவீதத்தை செலுத்திவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து, நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து நடிகா் விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். தனிநீதிபதி உத்தரவின் அசல் ஆவணம் இன்னும் கிடைக்கவில்லை. எனவே உயா்நீதிமன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட உத்தரவு நகலின்படி மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்று விசாரணைக்குப் பட்டியிலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தனிநீதிபதியின் உத்தரவு ஆவணம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என கூறினாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிட்டனா். அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அபராதத் தொகையை செலுத்தி விட்டு வரும் ஜூலை 28-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளதால், இந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் ஜூலை 26-ஆம் தேதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கும் நடைமுறை முடிந்த பின்னா், வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உயா்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT