தமிழ்நாடு

நாகையில் 2 பைபர் படகுகள் தீக்கிரை : படகு, இயந்திரம், வலைகள் சேதம்

DIN


 
நாகப்பட்டினம்: நாகையை அடுத்த  அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தை சேர்ந்தவர்கள் கலியரசு(47),  ரத்தினவேல்(45). இவர்களுக்குச் சொந்தமான பைபர் படகுகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட படகுகள் அக்கரைப்பேட்டை கடுவையாற்றில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடுவையாற்றுப் படகுத்துறை பகுதியிலிருந்து கரும்புகையுடன் துர்நாற்றம் வீசியுள்ளது.  அருகில் இருந்த மீனவர்கள் அங்குச்  சென்று பார்த்தபோது,  கலியரசு மற்றும் ரத்தினவேலு ஆகியோருக்குச் சொந்தமான 2 பைபர் படகுகளில் தீப்பற்றி எரிவது தெரியவந்தது.

இதையடுத்து,   மீனவர்கள்  நீண்ட நேரம் போராடி  தீயைக் கட்டுப்படுத்தினர். இதில்,  கலியரசு படகு மற்றும் இன்ஜின், வலைகள், ஐஸ் பெட்டி ஆகியன முற்றிலும் சேதமடைந்தன. ரத்தினவேலுக்கு சொந்தமான படகு மற்றும்  இன்ஜின் சேதமடைந்தன. 

இந்த தீ விபத்துக்கு மர்ம நபர்களின் சதிச் செயலே காரணம் எனவும், சேதமான பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 6  லட்சத்துக்கும் அதிகம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.  மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து   விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT