தமிழ்நாடு

நிர்வாகிகள் விலகல்: ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

7th Jul 2021 12:10 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

சேலம் ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில், அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சேலம் புறநகர் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணியின்  நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.  

முன்னாள்  முதல்வரின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடி தொகுதி பொறுப்பாளராக இருந்த செல்லதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் விலகியிருப்பது அதிமுகவின் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம், ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் ராஜ்சத்தியன்  பங்கேற்றுள்ளனர்.

மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி, ஆத்தூர், கொங்கணாபுரம், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி உள்ளிட்ட புறநகர் தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க பட வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT