தமிழ்நாடு

நாட்டில் கரோனாவிலிருந்து 97 சதவீதம் பேர் குணம்: சுகாதாரத்துறை

DIN

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97%ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் அதிகமானவற்றுள் ஒன்றாகும்.

நாட்டில் தற்போது மொத்தம் 1,03,73,606 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,301 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் தற்போது 1.75 லட்சத்திற்கும் குறைவானோர் (1,73,740) கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 1.62 சதவீதம் மட்டுமே ஆகும்.

பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தேசிய அளவில் சரிந்து வருவதையடுத்து, 31 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 5000க்கும் குறைவானோர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 78 சதவீதத்தினர் கேரளம், மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்காளம், ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இன்று காலை 8 மணி வரை, தமிழகத்தில் 82,039 பேர் உட்பட, நாடு முழுவதும் 23.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு (23,55,979) கொவைட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6,102 முகாம்களில் 3,26,499 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 42,674 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து கேரளத்தில் அதிகபட்சமாக 5,006 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,556 பேரும், அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் 944 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 11,666 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

நேற்று கேரளத்தில் 5,659 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,171 பேரும், தமிழகத்தில் 512 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 123 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT